
துணிவு முதல் பார்வை : மீண்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை
விஜய் நடிப்பில் வெளிவந்த "பீஸ்ட்" படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஒரு நிமிடத்தில் புரிந்த சாதனையை "துணிவு" படத்தின் முதல் பார்வை 9 நிமிடத்தில் தான் தொட்டது என நிமிடக் கணக்கில் எல்லாம் சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.
"துணிவு" படம் வெளியாகும் வரை அது பற்றி அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். விஜய் நடிப்பில் உருவாகி வரும் "வாரிசு" படம் பற்றியும் அப்டேட்கள் வர உள்ளன. இதனால், இரண்டு படங்களும் வெளியாகும் வரை விதவிதமான "டேட்டா" சண்டைகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம்.
அந்த சண்டைகள் அத்துமீறி போகாமல் இருக்க தங்களது ரசிகர்களுக்கு இருவருமே வேண்டுகோள் வைத்தால் நல்லது. அப்போதுதான் சமூக வலைத்தளங்கள் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்க முடியும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!