
மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த எமி ஜாக்சன்
ஜார்ஜ் பனாயிட்டோவ் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே எமி ஜாக்சன் குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுக்கு 2019ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஜார்ஜை விட்டு எமி பிரிந்து வேறு ஒருவரைக் காதலித்து வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் எமி ஜாக்சன். தற்போது விஜய் இயக்கி வரும் ஒரு புதிய தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். படத்தின் முழு படப்பிடிப்பும் லண்டனில் நடைபெறுகிறது. இதற்காக சமீபத்தில் கூட லண்டன் சென்று திரும்பியிருந்தார் அருண் விஜய்.
விஜய் கடைசியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "தலைவி" படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு அவர் இயக்கி வரும் படம் இது. இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!