
மணிரத்னமாக மாறி பதில் அளித்த கவுதம் மேனன்
தெலுங்கு புரொமோஷன் நிகழ்ச்சியில் தெலுங்கு தொகுப்பாளர் ஒருவர் கவுதம் மேனனிடம் கேள்வி கேட்கும்போது தவறுதலாக மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தை மனதில் நினைத்துக் கொண்டு சிம்பு, விஜய்சேதுபதி இவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து படம் இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார்.
ஆனால் கவுதம் மேனன் இதுபற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் உடனே மணிரத்னமாக மாறி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி என அனைவரையும் ஒரே பிரேமில் வைத்து இயக்குவது சவாலான விஷயம் தான் என்றாலும் மணிரத்னமாக இருந்ததால் அதை இயக்குவது சுலபமாக இருந்தது என்று பதில் அளித்தார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தவறுதலாக கேள்வி கேட்ட தொகுப்பாளரை கோபித்துக்கொள்ளாமல் அதேசமயம் சற்று நையாண்டியுடன் இந்த கேள்விக்கு இயக்குனர் கவுதம் மேனன் பதில் சொன்னது நெட்டிசன்கள் பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!