
கோச்சடையான் : லதா ரஜினிக்கு எதிரான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இந்த நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் லதா மீது தொரப்பட்ட சில பிரிவுகளை மட்டும் நீக்கி விட்டு மற்ற பிரிவின் கீழ் விசாரணை நடத்தலாம் என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் லதா தரப்பு வாதங்களை கேட்ட பிறகு லதாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!