
ஒரே படத்தில் என்ட்ரி கொடுக்கும் சீரியல் தோழிகள்
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இவர்கள் இருவருமே வெள்ளித்திரையில் புதிய படமொன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. "பகையே காத்திரு" என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் சின்னத்திரை நடிகைகளான ரேஷ்மாவும், ஷபானாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். ஒரே தொலைக்காட்சியில் நடிகைகளாக என்ட்ரி கொடுத்த தோழிகள் இருவரும் தற்போது ஒரே படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரேஷ்மாவுக்கும், ஷபானாவுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
"பகையே காத்திரு" படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். வரலட்சுமி, ஸ்மிருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கின்றனர். மணிவேல் இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!