கார்த்தி - ராஜூமுருகன் பட இசை பணியை துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
Advertisement
Advertisement
கார்த்தி - ராஜூமுருகன் பட இசை பணியை துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
செப் 16, 2022
அ நிறம் | அளவு
Advertisement
விருமன் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இதையடுத்து ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி .பிரகாஷ், இந்த படத்தின் கம்போசிங் பணிகள் துவங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படம் இதுவரை கார்த்தி நடித்த படங்களை விட கூடுதல் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!