
‛நம்பர் ஒன்ல் நம்பிக்கை இல்லை : பிரியங்கா மோகன்
அழகு என்பது வெளிப்புறத்தில் இல்லை. எண்ணங்கள் தான் நம்மை அழகாக்கும். வாடிக்கையாளரை 200 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்ட யார்ட்லிக்கு நான் விளம்பர துாதராக இருப்பது கவுரவமாகவே பார்க்கிறேன். நான் ‛ஜெயிலர்" படத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். அந்த மாதிரி எதுவும் இல்லை. மற்ற மொழிகளை விட, என் தாயின் மொழி என்பதால், தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிக சம்பளம் மற்றும் நம்பர் ஒன் வருவது என் குறிக்கோள் அல்ல. நல்ல படங்களில் நடித்தால் போதும். வெற்றி, தோல்வி எதுவானாலும் ஒருவர் மீது மட்டுமே குற்றம் சுமத்த முடியாது. அப்படி செய்யவும் கூடாது. சிறு வயதில் இருந்தே எனக்கு அரசியல் ஆசை இல்லை. என் வேலையை ரசித்து செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!