
பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை தவறவிட்ட அமலாபால்
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முதலில் என்னை அழைத்து ஆடிஷன் செய்தார்கள். ஆனால் அதையடுத்து படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. பின்னர் மீண்டும் அந்த படத்தை தொடங்கயிருந்தபோது எனக்கு அழைப்பு விடுத்தார் மணிரத்னம். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிப்பதற்கு மனதளவில் நான் தயாராக இல்லை. அதன் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ள அமலா பால், அந்த வேடத்தில் நடிக்காதது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அந்த வேடத்தில் நான் நடிக்காததற்கு சில காரணங்கள் உள்ளது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அமலாபால் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!