
அக்ஷிதா போபைய்யா வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் வெள்ளித்திரை கதவும் திறந்துள்ளது. தற்போது தமிழ், கன்னடம் என இரண்டு திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் அக்ஷிதா தமிழில் "ஆக்ஸிஜன் தந்தாலே" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், கூடுதல் தகவல் என்னவெனில் "கண்ணான கண்ணே" தொடரில் வில்லனாக நடித்து வரும் சித்தார்த் கபிலவாயி தான் படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். சீரியலில் சண்டை போடும் இவர்கள் சினிமாவில் ஜோடியாக நடித்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். அக்ஷிதாவின் திரைப்பயணம் வெற்றியடைய வேண்டும் எனவும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!