
கட்சிக்காரன்: முழுநீள அரசியல் படம்
"தோனி கபடிகுழு" படத்தை இயக்கிய ப.ஐயப்பன் தனது இரண்டாவது படமாக இதை இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக "கட்சிக்காரன்" உருவாகி உள்ளது. அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!