
‛நானே வருவேன் பாடல் இன்று மாலை வெளியீடு
இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம், செல்வராகவன் இயக்கி, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார் . தனுஷுடன் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ளார் .இந்த திரைப்படம் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் முதல் பாடலான வீரா சூரா என்ற பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருகிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொள்ள இருக்கிறார்கள் .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!