
கூழாங்கல்லுக்கு புதுச்சேரி அரசு விருது
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், ராட்டர்டாம் திரைப்பட விழாவில் விருதை வென்றது.
ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது. தந்தை மகனுக்கு இடையிலான ஒரு நாள் பயணத்தை சொல்லும் இந்த படத்தில் தந்தையாக செல்ல பாண்டியும், மகனாக கருத்திடையானும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்னும் தியேட்டர்களில் வெளியாகவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!