
டுவிட்டரை விட்டு வெளியேறிய ராஷி கண்ணா
ராஷி கண்ணா, நேற்று தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் இருப்பேன் என்றும் கூறினார். ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "வணக்கம் நண்பர்களே, எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். நன்றி!" என்று தெரிவித்துள்ளார் .
நடிகை ராஷி கண்ணா தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடமிருந்து அவர் கூறிய கருத்துகளுக்காக ஆன்லைனில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார். தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது .
இதற்கிடையில், அவர் அடுத்ததாக தமிழில் கார்த்தி நடிக்கும் "சர்தார்" படத்தில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள "யோதா" என்ற ஹிந்தி படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!