
கிளாமருக்குத் தாவுகிறாரா கீர்த்தி சுரேஷ்?
கிளாமரான புகைப்படங்களைப் பகிரும் நடிகைகளுக்கு அதிகமான லைக்குகள் கிடைக்கின்றன. அதை வைத்தே ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது. தற்போதைய நடிகைகளில் அதிகம் கிளாமர் காட்டாத ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் அவர் பகிர்ந்த போட்டோஷுட் புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமராகவே இருக்கிறது. நீள கவுன் ஒன்றின் இரண்டு பக்கங்களிலும் டிரான்ஸ்பரன்ட்டான இடைவெளி தோலின் நிறத்திலேயே உள்ளது. இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து அதுவே கிளாமர்தான் என ரசிகர்கள் ஒரு மில்லியனுக்கும் மேல் லைக் செய்துள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!