
உறியடி விஜய்குமார் படத்தில் 2 ஹீரோயின்
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கிறார். காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக தயாராகி வருகிறது. கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக "அயோத்தி" படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு "வத்திக்குச்சி" திலீபன், "கைதி" ஜார்ஜ் மரியான், "வடசென்னை" பாவல் நவகீதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார், மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கி உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!