
‛சினம் பட புரமோசன் டூர் : தமிழகம் முழுக்க சுற்றிய அருண் விஜய்
தமிழகம் முழுவதும் 13 நகரங்களுக்கு 3 நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வந்திருக்கிறார். அவருடன் ஹீரோயின் பாலக் லால்வானி, காளி வெங்கட் ஆகியோரும் உடன் சென்றனர். சினம் படம் வருகிற 16ம் தேதி வெளியாகிறது.
படத்தினை விஜயகுமார் தயாரித்துள்ளார். ஜிஎன்ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய்யுடன் பாலக் லால்வானி, காளி வெங்கட், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷபீர் இசை அமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!