
லைகர் படுதோல்வி : சமூக வலைத்தளங்களை விட்டு தற்காலிகமாக விலகும் சார்மி கவுர்
ஆனால், படம் வெளிவந்த பின் “இதற்காகவா இவ்வளவு பில்டப் கொடுத்தீர்கள்” என விமர்சகர்களும், ரசிகர்களும் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். படத்தில் கதையம்சம் என்ற ஒன்றுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என இந்தப் படமும் திரையுலகினருக்கு உணர்த்தியது.
தினமும் அந்தப் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், தகவல்கள், மீம்ஸ்களைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் படக்குழுவினருக்கு தனி மனதைரியம் வேண்டும். அதனாலோ என்னவோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முன்னாள் நடிகையான சார்மி கவுர் தற்காலிகமாக சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார்.
அவற்றில் மிகவும் ஆக்டிவ்வாகவே இருந்த சார்மி அவரது பதிவில், “சில் கைஸ், சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுக்கிறேன். பூரி ஜெகன்னாத் மீண்டு வருவார், பெரிதாக, சிறப்பாக…அது வரை... வாழு வாழ விடு,” என விலகலுக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!