
மாவீரன் படத்தில் நடிக்க தொடங்கிய அதிதி ஷங்கர்
செப் 03, 2022
Advertisement
முத்தையா இயக்கிய விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி. இப்படத்தில் ஒரு பாடலும் பாடி இருந்தார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு, நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில், மாடர்ன் ரோலில் நடிக்கும் அதிதி நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் மாவீரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக மாஜி ஹீரோயின் சரிதா நடிக்கிறார். இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு பரத் சங்கர் இசை அமைக்கிறார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!