
லீனா மணிமேகலைக்கு டில்லி நீதிமன்றம் சம்மன்
செப் 01, 2022
Advertisement
இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டதால் அது பெரும் சர்ச்சையானது. அதனால் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி அவருக்கு எதிர்ப்புகள் எழுந்ததோடு, டில்லி மற்றும் உத்திரபிரதேச நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி டில்லியில் உள்ள நீதிமன்றத்தில் இயக்குனர் லீனா மணிமேகலை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!