
இளையராஜாவும், நானும் சேருமிடம் தமிழ்நாடு : ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு
செப் 01, 2022
Advertisement
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு புதாபெஸ்ட் என்ற நகருக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கனடா நாட்டில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளனர். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்து அடைந்திருக்கிறார்கள். அப்போது இளையராஜாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோவை பகிர்ந்து, ‛‛நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடு தான்"" என்று பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!