
இந்தியன்-2 வில் இணைந்த நந்து பொதுவால்
கதாநாயகிகளாக காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் புதிதாக விவேக் கதாபாத்திரம் இணைக்கப்பட்டு சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக விவேக் காலமானதால் தற்போது அவருக்கு பதிலாக இந்தப் படத்தில் நடிகர் குருசோமசுந்தரம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
அதேப்போல முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நெடுமுடி வேணுவின் கதாபாத்திரமும் இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்வதாக உருவாக்கப்பட்டிருந்தது. அவரும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இந்தநிலையில் அவரும் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அதனால் அவர் நடித்த கதாபாத்திரத்தில் இன்னொரு மலையாள நடிகரான நந்து பொதுவால் என்பவர் நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் குணசித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ள இவர், கிட்டத்தட்ட மறைந்த நடிகர் நெடுமுடி வேணுவின் சாயலிலேயே இருக்கிறார் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு இவரை தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!