ஹரி - ஹரிஸ் இயக்கத்தில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛யசோதா". உன்னி முகுந்தன், வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் செப்., 9ல் அன்று மாலை 5:49 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகிறது. அன்றைய தினமே படத்தின் புதிய வெளியீட்டு தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆக., 12லேயே படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!