
சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் டிசம்பரில் தொடங்குகிறது!
ஆக 31, 2022
Advertisement
தற்போது பாலா இயக்கி வரும் வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்து வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறனும் டிசம்பர் மாதத்துக்குள் அப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டுள்ளார். அதனால் விடுதலை முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தை கேப் விடாமல் படப்பிடிப்பு நடத்தி வரும் வெற்றி மாறன், தற்போது விடுதலை படத்தின் கிளைமேக்ஸ் சண்டை கட்சியை படமாக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறார். இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!