தியேட்டரில் படக்குழுவுடன் கோப்ரா படம் பார்த்த விக்ரம்!
Advertisement
Advertisement
தியேட்டரில் படக்குழுவுடன் கோப்ரா படம் பார்த்த விக்ரம்!
ஆக 31, 2022
அ நிறம் | அளவு
Advertisement
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படம் 1500 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் விக்ரம் தனது மகனுடன் கோப்ரா படம் பார்க்க வந்திருந்தார். அவரை பார்த்து ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தார்கள். அதேபோல் இப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரும் ரோகிணி தியேட்டருக்கு கோப்ரா படம் பார்க்க வந்திருந்தார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!