
ஒன்றல்ல, இரண்டு : கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்
இந்நிலையில் ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக கனடா நாட்டில் மர்காம் என்ற நகரில் உள்ள தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் என பெயர் சூட்டி உள்ளனர். இதுதொடர்பான போட்டோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஹ்மான்.
அதில், ‛‛ஒரு போதும் இதை நான் என் வாழ்நாளில் எதிர்பார்த்ததில்லை. கனடா மக்களுக்கும், மர்கான் நகர மேயருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன். ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான குணம். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்"" என தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் பெயர் கனடா நாட்டு தெருவுக்கு சூட்டுவது இது முதல்முறையல்ல. கடந்த 2013ல் ஒரு நகரில் உள்ள தெருவுக்கு ‛அல்லா ரக்கா ரஹ்மான்" என அவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!