
பிசாசு படத்திற்கு ஏ சான்றிதழ்: மிஷ்கின் அதிர்ச்சி
இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய மிஷ்கின் “நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை போட்டோக்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதையும் நான் பார்க்கவில்லை. பிசாசு படத்தை குழுந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நிர்வாண காட்சியை பயன்படுத்தினால் ஏ சான்றிதழ்தான் கிடைக்கும், குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் அந்த காட்சியை படத்தில் வைக்கப்போவதில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ்தான் தரமுடியும், பயமுறுத்தும் வன்முறை காட்சிகள் இருக்கிறது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி குறைந்தபட்சம் யுஏ சான்றிதழாவது தாருங்கள் என்று மேல்முறையீடு செய்ய இருக்கிறார்களாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!