
இமயமலையை பைக்கில் சுற்றும் அஜித்
தற்போது படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானத்தில் லடாக்கிற்கு சென்ற அஜித், அங்கு தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 4 நாட்கள் வரை அவர் இமயமலையை சுற்றி வருகிறார்.
இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அஜித் ஓட்டும் பைக்கில் நெவர் எவர் கிவ் அப் என்று எழுதப்பட்டுள்ளது. இது விவேகம் படத்தில் அஜித் பேசும் பன்ஞ் டயலாக். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் 61வது படத்தின் டப்பிங் பணியில் இணைவார் என்று தெரிகிறது. நடிகர்கள் ஆன்மிக தேடலுக்காக இமயமலையை சுற்றும்போது அஜித் சாகசத்துக்காக சுற்றுகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!