
12வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் -ஆர்த்தி தம்பதி!
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . காரணம் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி சிவகார்த்திகேயன், ஆர்த்தி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் அவர்கள் இன்று 12வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு, ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!