
‛பிசாசு 2 : ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி - மிஷ்கின் புது தகவல்
இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: நிர்வாண காட்சிகளில் நடிப்பதற்காக ஆண்ட்ரியா அதிக சம்பளம் கேட்டது உண்மை தான். இது வழக்கமான ஒன்று. ஆனால் நிர்வாண காட்சிகளை படமாக்கவில்லை. புகைப்படங்களே எடுக்கப்பட்டது. எனக்கும், ஆண்ட்ரியாவுக்கு பொதுவான நண்பரான புகைப்பட கலைஞர் சுந்தர் அந்த படங்களை எடுத்தார். அப்போது எனது பெண் உதவியாளர் மட்டுமே அங்கே இருந்தார். நான்கூட அந்த படங்களை பார்க்கவில்லை. பிசாசு 2 படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நிர்வாண படங்களை நீக்கச் சொல்லிவிட்டேன். காரணம் அந்த காட்சிகள் இடம்பெற்றால் தணிக்கையில் ஏ சான்றிதழ் தான் தருவார்கள். அப்போது குழந்தைகள் பார்க்க முடியாது. அதனால் நீக்கி விட்டேன் என்கிறார் மிஷ்கின்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!