
விநாயகர் வழிபாட்டுடன் ‛பப்ளி பவுன்சர் பிரமோஷனை துவங்கிய தமன்னா
சமீப காலத்தில் தமன்னாவின் படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் கூட இந்தியாவில் வெளியாக இருக்கும் ஹாலிவுட் படமான தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் ; தி ரிங்ஸ் ஆப் பவர் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது இருப்பை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வந்தார் தமன்னா.
இந்த நிலையில் ஹிந்தியில் தமன்னா நடித்துள்ள பப்ளிக் பவுன்சர் என்கிற படம் வரும் செப்-23ல் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை இப்போது துவங்கி உள்ளனர். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் மதூர் பண்டார்கருடன் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்துள்ளார் தமன்னா. இந்த படத்தில் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு பெண் பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!