
மலையாள திரைப்படத்தை வெளியிடும் கார்த்திக் சுப்பராஜ்
இன்னொரு பக்கம் ஸ்டோன் பெஞ்ச் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி புதிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். மேலும் நான்கைந்து குறும்படங்களை கொண்ட ஆன்தாலாஜி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் முதன்முதலாக "அட்டென்ஷன் ப்ளீஸ்" என்கிற திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிதின் இசாக் தாமஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம் என்பவர் தயாரித்துள்ளார். தனது ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!