
சிரஞ்சீவி பிறந்தநாள் ஸ்பெஷல் : காட் பாதர் டீசர்
இன்று(ஆக., 22) சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு இப்படத்தின் டீசரை யு டியுபில் வெளியிட்டார்கள். டீசர் முழுவதும் ஒரு ஆக்ஷன் படமாக, சிரஞ்சீவியின் படமாக இருக்கும் என உணர்த்துகிறது. மலையாளத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரம் சஸ்பென்சாக இருந்து கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் வரும். அக்கதாபாத்திரத்தில் தெலுங்கில் சல்மான் கான் நடித்துள்ளார். அந்த சஸ்பென்சை நேற்று வெளியான டீசரிலேயே உடைத்துவிட்டார்கள்.
டீசரின் துவக்கத்தில் நயன்தாரா, பின்னர் சிரஞ்சீவி, கடைசியாக சல்மான்கான் என "லூசிபர்" படத்தைத்தான் இப்படி மாற்றியிருக்கிறார்களா என ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது டீசர். மலையாளத்தில் பக்கா அரசியல் படமாக இருந்ததை தெலுங்கில் பக்கா மசாலா படமாக மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது. இருப்பினும் 24 மணி நேரத்திற்குள்ளாக தெலுங்கு டீசர் 74 லட்சம் பார்வைகளையும், ஹிந்தி டீசர் 22 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!