
அஞ்சலி மேனனின் புதிய படத்தில் நித்யா மேனன்
இதற்கு முன்னதாக அஞ்சலி மேனன் கதை எழுதி, அன்வர் ரஷீத் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நித்யா மேனன். அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேய்ஸ் படத்திலும் கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் ஜோடியாக நட்புக்காக நடித்திருந்தார் நித்யா மேனன். இந்த நிலையில் தான், அஞ்சலி மேனனின் படத்தில் தான் மீண்டும் கதாநாயகியாக நடிப்பது உறுதிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!