ஐமேக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்
ஆக 17, 2022
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள சரித்திரப் படம் "பொன்னியின் செல்வன்". இப்படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் செப்டம்பர் 30ம் தேதியன்று வெளியாக உள்ளது.
தமிழில் தயாராகி இருந்தாலும் பான் இந்தியா படமாக இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தை "ஐமேக்ஸ்" வடிவிலும் திரையிட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள். தமிழில் "ஐமேக்ஸ்" வடிவில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுதான்.
"ஐமேக்ஸ்" வடிவில் படங்களைத் திரையிட பிரத்யேகமான தியேட்டர்கள், திரைகள் இருக்கின்றன. வழக்கமான திரைகளின் அளவை விட ஐமேக்ஸ் திரைகளின் அளவு பெரிதாக இருக்கும். உலகத்திலேயே பெரிய ஐமேக்ஸ் தியேட்டராக ஜெர்மனியில் 44 மீட்டர் அகலம், 23 மீட்டர் உயரம் கொண்ட தியேட்டர் உள்ளது. 1.43 : 1 என்ற விகிதத்தில் படங்கள் திரையிடப்படும்.
"பொன்னியின் செல்வன்" மாதிரியான பிரம்மாண்டப் படங்களை ஐமேக்ஸ் தியேட்டர்களில் பார்ப்பது தனி அனுபவமாக இருக்கும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!