
75வது நாளில் விக்ரம்
இப்படம் ஓடிடியில் கடந்த மாதம் ஜுலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியில் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் வெளியாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்பு வேறு எந்தப் படமும் ஓடிடியில் வெளியான பின்னும் 75 நாட்களைத் தொட்டதில்லை. அதிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது "விக்ரம்".
இப்படத்தில் கிடைத்த லாபத்தால் கமல்ஹாசன் அடுத்தடுத்து அவரது சொந்த நிறுவனத்தின் மூலம் மேலும் சில புதிய படங்களைத் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!