
டுவிட்டரில் நுழைந்த விக்ரம்
முன்னணி நடிகர்களில் விஜய் பெயரில் ஒரு டுவிட்டர் கணக்கு இருக்கிறது. ஆனால், அதில் எப்போதாவது ஒரு முறைதான் அப்டேட் வரும். அதையும் விஜய் நேரடியாக நிர்வகிக்கவில்லை. அவரது அலுவலகத்தில்தான் நிர்வகிக்கிறார்கள். விக்ரம், அஜித் இருவரும் சமூக வலைத்தளம் பக்கம் வராமல் இருந்தார்கள். இப்போது விக்ரம் டுவிட்டர் தளம் பக்கம் வந்துள்ளார். அதற்குள் 71 ஆயிரம் பேர் அவரைப் பின் தொடர்ந்துள்ளார்கள். வரும் போதே தன்னுடைய கணக்கை "வெரிபைடு" வாங்கித்தான் நுழைந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது பெயரில் ஏற்கெனவே ஒரு கணக்கு உள்ளது. ஆனால், அதில் 214 வாரங்களுக்கு முன்பாகத்தான் தனது கடைசி பதிவை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் தளத்தில் விக்ரம் நுழைந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் நடித்துள்ள "கோப்ரா" இந்த மாதம் 31ம் தேதியும் அடுத்த மாதம் 31ம் தேதி "பொன்னியின் செல்வன்" படமும் வெளியாக உள்ளது. தாமதமாக வந்தாலும் சரியான நேரத்தில்தான் விக்ரம் டுவிட்டர் பக்கம் வந்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!