அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது?
Advertisement
Advertisement
அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது?
ஆக 12, 2022
அ நிறம் | அளவு
Advertisement
வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வரும் 61வது படத்தில் அவருடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் அஜித் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அஜித் 61வது படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த படத்திற்கு வல்லமை என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் , ஸ்ரீதேவியின் பிறந்த நாளான நாளை இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாகவும்தகவல் வைரலாகி வருகிறது. ஆனபோதிலும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு வெளியிடவில்லை.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!