
தேசிய விருது குறித்து பார்த்திபன் கிண்டல்
அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தை பார்த்துவிட்டு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதோடு, ""தேசிய விருதுக்கா? என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால் ""மோடிஜீக்கு ஜே" என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது. தேசிய விருது மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வாங்கிய விருதை திருப்பிக் கொடுங்கள் என்றும், எதற்கெடுத்தாலும் பிரதமர் பெயரை இழுத்து அவரை அவமானப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!