
திருமண ரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூர்ணா
பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் நிச்சயதார்ர்த்தம் நடந்தது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஷாம்னா காசிம் தான் சினிமாவுக்காக பூர்ணா. கடந்த சில நாட்களாக பூர்ணாவின் திருமணம் ரத்து என சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. அவற்றை மறுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எப்போதும் என்னவர்,” எனப் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூர்ணா.
பூர்ணாவின் அடுத்த தமிழ்ப் படமாக மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள "பிசாசு 2" படம் வெளிவர உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!