
சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில்
தற்போது ஆமீர்கான் நடித்துள்ள "லால் சிங் சத்தா" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாகசைதன்யா. அதற்காக பிரமோஷன்களுக்காக அவர் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். மும்பைக்குச் சென்ற போது ஒரு பேட்டியில் அவரிடம், "சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்…?”, என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நாகசைதன்யா, “அவருக்கு ஹை சொல்வேன், கட்டிப்பிடிப்பேன்,” என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.
ஆனால், சமீபத்தில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் சமந்தாவிடம், “நாகசைதன்யாவையும், உங்களையும் ஒரு அறைக்குள் தள்ளினால் என்ன செய்வீர்கள்,” என்று கேட்கப்பட்டதற்கு, “யாராவது ஒருவர் கூரான ஆயுதங்களை மறைப்போம்,” என்று பதிலளித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!