கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன்
Advertisement
Advertisement
கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன்
ஆக 09, 2022
அ நிறம் | அளவு
Advertisement
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை கவுதம் கார்த்தி நடித்த ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அதைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க போவதை ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார். அப்போது அப்படத்தை இயக்கப் போவது யார் என்பதை கமலஹாசன் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அந்தப் படத்தை சசிகுமார் நடித்த கிடாரி என்ற படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நாயகி உள்ளிட்ட மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாக உள்ளது
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!