
மாநாடு ரீ-ரிலீஸ்
ஆக 06, 2022
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி உள்பட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாநாடு. யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த சிம்புவுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த மாநாடு 100 நாட்கள் தியேட்டரில் ஓடி திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் 117 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு திரையரங்கில் மாநாடு படம் ரீ-ரிலீஸ் ஆகப்போவதாகவும், அதற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி உள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!