
மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த கார்த்தி
முத்தையாக இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‛விருமன்" படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கோலாகலமாக நடந்தது. இரவு 11 மணிக்கு வரை இந்த இசை வெளியீடு நீடித்தது. இந்நிலையில் கார்த்தி இன்று காலை ஆறு மணி அளவில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு கோபுரம் வழியாக சென்று அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார்.
கார்த்தி கூறுகையில், ‛‛பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது"" என்றும் தெரிவித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!