
மம்முட்டி படத்தில் இணைந்த ஏஜென்ட் டீனா
இதற்கு முன் குரூப் டான்ஸர்களில் ஒருவராக இருந்து பல வருடங்களாக திரையுலகில் பயணித்தாலும் விக்ரம் படம் தான் அவர் மீது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. இதன் உடனடி பலனாக மலையாளத்தில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் மம்முட்டியை வைத்து இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஏஜென்ட் டீனா என்கிற வசந்தி.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது மம்முட்டியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!