
புஷ்பா - 2வில் பிரியாமணி
அந்தவகையில் தெலுங்கில் உப்பெனா படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி புஷ்பா படத்தின் முதல்பாகத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகினார். தற்போது இரண்டாம் பாகத்தில் அவர் வில்லனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் பிரியாமணி இந்த படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். இப்படத்தில் அவர் ஒரு வலுவான ரோலில் கிட்டத்தட்ட வில்லி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரியாமணி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!