
முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான "கஞ்சாப்பூவு கண்ணால" பாடல் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டாகிவிட்டது. அடுத்து இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள "மதுரை வீரன்" என்ற பாடலின் சிறு வீடியோவை இன்று வெளியிட்டார்கள்.
அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி. பாடலை முதல் முறை கேட்கும் போதே இனிமையாக உள்ளது. அந்தப் பாடலுக்கு அதிரடியான நடனத்தையும் ஆடியுள்ளார். அதிதியைப் பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டாக்டருக்குப் படித்து முடித்துள்ள அதிதி சினிமா மீதுள்ள ஆசையால் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!