
சமந்தா பற்றி பேசுவதில் ஆர்வம் இல்லை - நாகசைதன்யா
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட நாகசைதன்யா, அமீர் கானுடன் இணைந்து தான் நடித்துள்ள லால்சிங் சத்தா படம் குறித்து பல தகவல்களை வெளியிட்டார். அப்போது அவரிடத்தில் சமந்தா குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, ‛‛நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது குறித்து இருவருமே அறிக்கை வெளியிட்டோம். இப்போது இருவருமே அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் மீண்டும் பழைய வாழ்க்கை குறித்து பேசி தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க விரும்பவில்லை. அதோடு எங்களது கடந்த கால வாழ்க்கை குறித்து அதிகப்படியான விஷயங்களை இந்த உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை"" என்று சமந்தா குறித்த கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நாகசைதன்யா .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!