
விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
தெலுங்கு தயாரிப்பாளர்களின் சில சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளை "வாரிசு" படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தான் நடத்தினார். தற்போது அவரே ஸ்டிரைக்கை மீறி ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி படப்பிடிப்பை நடத்துவதை மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம்.
அவரைப் போலவே தனுஷ் நடிக்கும் "வாத்தி" படத்தின் தயாரிப்பாளரான நாகவம்சியும் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியமான ஒரு உறுப்பினர். இதனால், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!