
விசாகப்பட்டிணத்தில் தடையில்லாத படப்பிடிப்பில் வாரிசு
தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்தாமல் ஸ்டிரைக்கில் தயாரிப்பாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. விபிஎப் கட்டணம், டிக்கெட் கட்டணம், தினசரி ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை, ஓடிடியில் படங்களை வெளியிடுவது, வெளியீட்டுத் தேதிகளில் வரையறை, பட வெளியீட்டில் சில மாற்றம் என சில பல பிரச்சினகைளுக்காக இந்த ஸ்டிரைக் ஆரம்பமாகி உள்ளது.
ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி "வாரிசு" படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தமிழில்தான் எடுத்து வருகிறார்களாம். தெலுங்கில் டப்பிங் செய்துதான் வெளியிடப் போகிறார்களாம். ஸ்டிரைக்கில் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறாது. மற்ற மொழிப் படங்களுக்கு ஒத்துழைப்பு உண்டு என்றும் அறிவித்துள்ளார்களாம். அதனால்தான், விஜய்யின் "வாரிசு" படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எனவே, மற்ற தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தடையில்லாமல் நடைபெறும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!