
பழைய யுவன் வேணும் என கேட்ட இயக்குனர்
இந்த படத்தின் ‛சாச்சிட்டாலே" என்னும் முதல் பாடல் நாளை (ஆக.,1) மாலை வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் பாடல் கம்போசிங்கிற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, "எனக்கு பழைய யுவன் வேணும் சார்" என்று மிகுந்த ஆர்வத்துடன் எமோஷனலாக பிரதீப் கேட்கிறார்.
இதனை கேட்ட யுவன் சற்று நேரம் நிதானமாக யோசித்து விட்டு, பழைய டிரங்க் பெட்டி ஒன்றை திறக்கிறார். அதிலிருந்து தனது இளம் வயது போட்டோவை எடுத்து கொடுத்து இதுதான் பழைய யுவன்சங்கர்ராஜா என்று அவர் கூற பிரதீப்பிற்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. பின்பு இயக்குநரிடம், "பழைய யுவனோ, புது யுவனோ கிடையாது. அந்த யுவனும் இந்த யுவனும் ஒன்னுதான்" எனக் கூலாக சொல்கிறார். இந்தப் புரோமோ திரைத்துறையில் 25 ஆண்டு கொண்டாடும் யுவனுக்கு வாழ்த்து கூறுவது போல வெளியாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!